இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.