வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று புதன்கிழமை பதவியேற்கின்றார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச அதிபராக வேதநாயகன் பணியாற்றிய வேளை, அப்போதைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் முயற்சியின் காரணமாக யாழ். மாவட்டத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.
இவ்வாறு தூக்கியெறியப்பட்ட சமயம் அவரது ஓய்வுக்கு 3 மாத காலமே இருந்தபோதும் அவர் பதவியைத் துறந்தார். இவ்வாறு பதவி துறந்தவரை எஞ்சிய 3 மாத காலத்துக்கான சம்பளத்தையும் அரசுக்குச் செலுத்தும்படியாக அப்போதைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் வியூகம் வகுத்த சமயம் அந்த 3 மாத கால சம்பளத்தையும் அரசுக்கு மீளச் செலுத்தியே அவர் ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார்.
இந்தநிலையில் தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய ஆட்சியில் பழிவாங்கப்பட்டவர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பு முன்வந்தமையால் வேதநாயகன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.