புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் முயற்சி

2024.09.25ம் திகதி மதியம் பிரதானவீதி நெல்லியடியில் அமைந்திருக்கும்
style one ஆடையத்தில் இனந்தெரியாத நபர்கள் இருவரால் கடைக்கு தீ வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது

சகோதர இனமான முஸ்லிம் நபரொருவருக்கு சொந்தமான இந்த ஆடையகத்தில் கடந்த யூன் மாதமும் பெற்றோல் குண்டு வீசப்பட்ட நிலையில் அந்த சந்தேக நபர்களை (யாழ்ப்பாணத்தை சேர்ந்த) நெல்லியடி பொலிசாரால் கைது செய்திருந்த நிலையில் இன்னும் கடையை தீ வைப்பதற்கான முயற்சி செய்யப்பட்டுள்ளது..

அண்மைக்காலங்களாக யாழில் ஆவா, நிஷாவிக்கர்,001, தனுறொக் போன்ற பெயர்களில் புதிய புதிய காவாலி குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் போதைபொருளுக்கு அடிமையான மற்றும் கலாச்சார சீர்கேடுகளை செய்யும் தமிழ் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டு சொற்ப பணத்தினை வழங்கி பழிவாங்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது