நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக அதிகளவில் முறைப்பாடுகள்! – பொலிஸ் பேச்சாளர்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைணகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர் எனினும் விசாரணைகள் ஆரம்பமாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவாரத்திற்குள் நாங்கள் இதனை முழுமையாக ஆராயவேண்டு;ம் என தெரிவித்துள்ள அவர் சிஐடியின் இயக்குநரிடம் முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர், சிஐடியினர் அடுத்த சில நாட்களில் இது குறித்து தீர்மானிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்