யாழில் தமன்னாவுடன் ரம்பாவின் கணவருடைய செயல்

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றை யாழில் ஆரம்பித்துள்ள நடிகை ரம்பாவின் கணவர், அந்த நிறுவனத்துக்காக யாழ் மண்ணில் தென்னிந்திய சினிமா கலைஞர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

பாடகர் ஹரிகரனின் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நாளை மறுதினம் யாழ். முற்றவெளியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருதொகுதி கலைஞர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதோடு குறிப்பாக தமன்னா, யோகிபாபு, ஹரிகரன் உள்ளிட்ட கலைஞர்களை சந்திப்பதற்காக ஒரு நிகழ்வை நாளை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒரு மணித்தியாலம் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு நுழைவுக்கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் அறவிடுகிறார்கள்.

நுழைவுச்சீட்டுகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதிகள் அனைத்தும் யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள்.