ட்ரோன் கேமரா பறக்கவிட்டவர் கைது

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டார்.

தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே தெல்லிப்பழை பொலிஸாரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்