யாழில் ஆசை ஆசையாய் ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள  விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.