ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் விபத்து!! நடந்தது என்ன?? – படங்கள் –

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில்
ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்தன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியது.

சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்திவிட்டார்.

இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த எரிபொருளில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இதனால் சில மணி நேரம் ஏ9வீதி வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புகையிரத கடவை அருகில் இருந்த வீதி ஊடாக போக்குவரத்து இடம்பெற்றது.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த ஒயில் வீதி முழுவதும் கசிந்து காணப்பட்டது.

விபத்துக்குள்ளான வாகனங்களை கனரக வாகனங்கள் மூலம் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன் வீதியில் வாகனங்கள் சறுக்காது இருக்க மண் பரப்பப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் விபத்து!! நடந்தது என்ன??  - படங்கள் --oneindia news ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் விபத்து!! நடந்தது என்ன??  - படங்கள் --oneindia news ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் விபத்து!! நடந்தது என்ன??  - படங்கள் --oneindia news