பொங்கி எழும் தமிழ் மக்கள் – நாளை நல்லூரிலிருந்து வவுனியா நோக்கி மாபெரும் வாகனப் பேரணி!
வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளால் நாளை காலை 7.30 மணிக்கு நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. பேரணியாக வவுனியா சென்று அங்கு நடைபெறும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்! வெடுக்குநாறி தமிழர் சொத்து!
சற்று முன் நாட்டை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு-ஒருவர் பலி..!{படங்கள்}
ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாந்தன் அண்ணாவின் வித்துடலுக்கு நாளை இறுதி அஞ்சலி-நாளை மறுநாள் நல்லடக்கம்-துக்க தினமாக அனுஸ்ரிக்க கோரிக்கை..!
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளை தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் நாளை தினம் தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து அமரர் சாந்தனிற்கு […]
சாந்தன் அண்ணாவின் வித்துடலுக்கு நாளை இறுதி அஞ்சலி
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளை தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள்...
சாந்தன் அண்ணாவின் உடல் சற்று முன் உறவுகளிடம் கையளிக்கப்பட்டது..!
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் இழுபறிகள் காணப்பட்ட போதிலும் தற்போது சகல பரிசோதனைகளும் நிறைவுபெற்று உடல் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்தார். சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அஞ்சலி நிகழ்வு மற்றும் இறுதி […]
யாழ் கோர விபத்தில் உயிரிழந்த உயர்தர மாணவன் தொடர்பில் வெளியான முழுமையான தகவல்..!{படங்கள்}
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01) காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் […]
யாழ் கோர விபத்தில் உயிரிழந்த உயர்தர மாணவன் தொடர்பில் வெளியான முழுமையான தகவல்
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01) காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீசாலை கிழக்கைச்...
ஆசை ஆசையாய் இலங்கை வர காத்திருந்த சாந்தன் உயிரிழப்பு-காலன் செய்த சோகம்..!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த இலங்கை சேர்ந்த சாந்தன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் […]
ஈழத்தமிழர்களுக்கு தனிநாடே தீர்வு-மோடியை வழிமறித்து வேண்டுகோள் விடுத்த மதுரை ஆதீனம்..!{காணொளி}
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்ற மோடியை நேரில் சந்தித்து மாலை அணிவித்து ஆசிர்வாதம் வழங்கிய மதுரை ஆதீனம் அவர்கள் பிரதமர் மோடி அவர்களிடம் வேண்டு கோள் ஒன்றையும் விடுத்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திரா காந்தி அம்மையார் இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க கோரியும்.இலங்கை தமிழர்களுக்கு தனி நாடே தீர்வாக இருக்கும் என்பதனையும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஆன்மீக விடயங்களில் […]
சற்று முன் கோர விபத்து-இருவர் பலி..!
தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் பணியில் இருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.